Porul

Technology Upgradation Fund Scheme for MSMEs

தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியுதவித் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழகத்தில் உள்ள குறு-சிறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ந்துவரும் உலகிற்கேற்ப தொழில்நுட்பங்களை வாங்கிப் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக AI, சென்சார் தொழில்நுட்பம், நவீன உற்பத்தி இயந்திரங்களை வாங்க நிதி வசதி இல்லாமல் இருக்கின்றன. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் தமிழகத்தின் MSME நிறுவனங்கள் போட்டியிடும் சூழல் இல்லாமல் போகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு, MSME நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை வாங்கிப் பயன்படுத்த நிதியுதவி செய்யும் வகையில், முதலீட்டு மானியம் அல்லது அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக 1000 கோடி தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியாக ஒதுக்கப்படும்.

Manifesto Summary (English)

A Technology Upgradation Fund Scheme will be established with an allocation of Rs. 1000 crore to help MSMEs adopt new technologies like AI, sensor technology, and modern production machinery. This scheme will provide investment subsidies or a maximum of Rs. 50 lakh to MSMEs to enhance their competitiveness in the global market.