Straw Purification Centers for Biogas and Ethanol Production
வைக்கோல் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் எரிவாயு மற்றும் எத்தனால் உற்பத்தி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நெல் அறுவடையின் போதும், டன் கணக்கில் வைக்கோல் கிடைக்கிறது. ஆனால், அவை பெரும்பாலும் முறையாகப் பயன்படுத்தப்படாமல் தீ வைத்து எரிக்கப்படுகிறது; அல்லது விவசாயக் கழிவுகளாக அகற்றப்படுகிறது. இந்த நிலையை மாற்றி, வைக்கோலில் இருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் 10 வைக்கோல் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் எத்தனால் மற்றும் எரிவாயு தயாரிக்கப்படும். இதன்மூலம், நெல் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்படும். மேலும், இப்படி அமைக்கப்படும் வைக்கோல் சுத்திகரிப்பு நிலையங்கள், உள்ளூர் விவசாயிகள் குழு மூலம் நிர்வகிக்கப்படும்.
Manifesto Summary (English)
10 straw purification centers will be established in Thanjavur and Tiruvarur districts to convert paddy straw, currently wasted, into biogas and ethanol. These centers, managed by local farmer groups, will provide additional income to paddy farmers.