Protect Two-Language Policy and Oppose Three-Language Policy
இருமொழிக் கொள்கை பாதுகாப்பு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையின் மூலம் திணிக்க முற்படும் மும்மொழிக் கல்வித் திட்டம், தமிழ்நாட்டின் மொழிப் பாரம்பரியத்தையும், கல்வியின் தரத்தையும் கடுமையாகப் பாதிக்கும். த.வெ.க சார்பில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதில் ஒருமித்த கருத்தையுடைய மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட மாநிலங்களுக்கிடையேயான ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அவரவர் தாய்மொழி மற்றும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை நிறைவேற்ற வலியுறுத்தப்படும்.
Manifesto Summary (English)
The TVK will oppose the three-language policy imposed by the Union government's New Education Policy, which harms Tamil Nadu's linguistic heritage and education quality. A resolution will be passed in the TN Assembly, and a special committee will be formed with other like-minded states. The TVK will advocate for a two-language policy (mother tongue and English as a link language) across all Indian states.