Porul

Financial Assistance and 'Thai Care' Centers for Pregnant Women

கர்ப்பிணிப் பெண்கள் உதவித் தொகை மற்றும் 'தாய் கேர்' மையங்கள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

கர்ப்பிணிப் பெண்கள், அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகள் வாங்குவதற்கும், மாதாந்திர மருத்துவப் பரிசோதனை செய்வது மற்றும் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் உதவும் வகையில் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 'தாய் கேர்' என்ற பெயரில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில் கர்ப்பிணிப் பெண்கள் அவர்களுடைய பிரசவ நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து பயன் பெறலாம். இந்த மையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கட்டணமில்லாமல் உணவு மற்றும் மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Pregnant women will receive ₹25,000 financial assistance for nutrition, medical check-ups, and essential needs. 'Thai Care' service and assistance centers will be established statewide, offering free food, medical aid, and continuous monitoring, especially near delivery.