Extend Fishermen Welfare Board Benefits to Inland Fishermen and Provide Shrimp Disease Insurance
உள்நாட்டு மீனவர்களுக்கு மீனவர் நலவாரியப் பலன்கள் மற்றும் இறால் நோய் காப்பீடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
கடல் தவிர்த்து ஆறு, கண்மாய், குளம், அணைகளில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் எந்தவிதமான பலன்களும் கிடைப்பதில்லை. இந்த நிலையை மாற்றி, மீன்பிடித்தலை தொழிலாகக் கொண்ட அனைத்து மீனவர்களுக்கும் தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் அனைத்துப் பலன்களும் கிடைக்க வழிவகை செய்யப்படும். தகுதியாய்ந்த இறால் உற்பத்தியாளர்களும் இத்திட்டத்தின் கீழ் பலன் பெறுவார்கள். மேலும், எதிர்பாராத நோய்த் தாக்குதல்களால் நட்டத்தைச் சந்திக்கும் இறால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், இறால் நோய் காப்பீடு வழங்கப்படும்.
Manifesto Summary (English)
All benefits of the Tamil Nadu Fishermen Welfare Board will be extended to inland fishermen (rivers, ponds, lakes, and dams). Additionally, shrimp disease insurance will be provided to shrimp producers to cover losses from unexpected disease outbreaks.