Establish CM-Monitored Anti-Drug Force to Eradicate Drug Use and Support Rehabilitation
முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் போதைப்பொருள் தடுப்பு படை அமைத்து, போதைப்பொருள் பயன்பாட்டை அறவே நீக்கி, மறுவாழ்வு அளிப்போம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கப்படும். இதன்மூலம், போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு போதைப் பொருள் பயன்பாடு அறவே நீக்கப்படும். போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் போதை எதிர்ப்பு மன்றம் அமைக்கப்படும். த.வெ.க. அரசு போதையிலிருந்து மீள்பவர்களுக்கு உதவ “மறுவாழ்வு நிதி” உருவாக்கும். மேலும், போதையை ஒழிக்கும் கிராமங்களுக்கு அரசின் மதிப்பீடு சான்றிதழோடு ரூ. 10 லட்சம் கட்டமைப்பு திட்டங்களுக்காகச் சிறப்பு நிதி வழங்கப்படும்.
Manifesto Summary (English)
The TVK government will establish an Anti-Drug Force under the direct supervision of the Chief Minister, operating on a war-footing to completely eradicate drug use. Drug sellers will be arrested and detained under the Goondas Act. Anti-drug clubs will be formed in every school. A 'Rehabilitation Fund' will be created to help those recovering from addiction. Additionally, villages that eradicate drugs will receive a government-certified grant of ₹10 lakh for infrastructure development.