Aram

Ensure Justice and Rights for Sri Lankan Tamils

இலங்கைத் தமிழர்களுக்கான நீதி

வாக்குறுதி விவரம் (Tamil Description)

இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வந்து, தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க த.வெ.க சார்பில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும். இந்த நடவடிக்கை மூலம், மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் இலங்கைத் தமிழர்கள் பெறுவது உறுதி செய்யப்படும். அதுபோல, இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளை, பண்பாட்டு அடையாளங்களை, உடைமைகளைக் காக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள த.வெ.க சார்பில் அழுத்தம் கொடுக்கப்படும். இலங்கையில் இன ரீதியாக நிலவும் பாதுகாப்பற்ற சூழலை மாற்ற ஒன்றிய அரசு மூலம் த.வெ.க உரிய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.

Manifesto Summary (English)

The TVK will advocate for Indian citizenship for Sri Lankan Tamils residing in Tamil Nadu, ensuring their access to state welfare schemes. It will also pressure the Union government to protect the rights, cultural identity, and property of Tamils in Sri Lanka and address the unsafe ethnic situation there.