Inbam

Direct, No-Application Delivery of Welfare Schemes

ஆவணங்கள் இல்லாமல் நேரடியாக நலத்திட்டங்கள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

நமது ஒவ்வொரு அரசுத் திட்டமும் உறுதியாகவும், நேரடியாகவும் மக்களுக்குச் சென்றடையும் வகையில் இருக்கும். இந்தியாவிலேயே முதன்முறையாக எந்தவித ஆவணங்களையும் வலுக்கட்டாயமாக மக்களிடம் நிர்ப்பந்திக்காமல் (No-Application) மக்களுக்கு நேரடியாக மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டுசெல்லும் அரசாக நமது அரசு இருக்கும். தற்போது, திட்டங்களைப் பெற தகுதி, விண்ணப்பப் பூர்த்தி, அலுவலகத் தொடர்பு, லஞ்சம் போன்ற பல நிர்ப்பந்தங்கள் உள்ளன. அடுத்த 5-7 ஆண்டுகளில், தொழில்நுட்ப உதவியுடன் (ஆதார், குடும்ப அட்டை, குடும்பத் தகவல்கள்) தகுதியான பயனாளிகளைக் கண்டறிந்து, விண்ணப்ப நடைமுறை இல்லாமல் திட்டப் பலன்களை நேரடியாக வீடு தேடி "முதல்வரின் மக்கள் சேவை நண்பர்" மூலம் சேர்க்கப்படும்.

Manifesto Summary (English)

Our government will ensure that every welfare scheme reaches the people directly and reliably, without requiring any mandatory applications or documents, making Tamil Nadu the first in India to implement a 'No-Application' system for welfare benefits.