Development of Tamil Artificial Intelligence Model
தமிழ் செயற்கை நுண்ணறிவு மாதிரி உருவாக்கம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படும் AI தொழில்நுட்பம் உலகத்தைப் பின் எல்லாத் துறைகளும் அதற்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன. ஆனால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆங்கிலத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. தமிழ் மொழியில் இந்தத் தொழில்நுட்பத்தை வடிவமைப்பதும், பயன்படுத்துவதும் காலத்தின் அவசியமாகிறது. எனவே, முன்னணிப் பல்கலைக்கழகங்களோடு இணைந்து சிறப்புத் தமிழ் செயற்கை நுண்ணறிவு மாதிரி உருவாக்கப்படும். இந்த சேவை நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் கட்டணமில்லாமல் வழங்கப்படும். வெளிநாட்டினருக்கு வணிக உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
The TVK will develop a specialized Tamil Artificial Intelligence model in collaboration with leading universities, providing it free to the people of Tamil Nadu and on a commercial license basis to foreigners.