Porul

Welfare for Copra and Coconut Farmers

கொப்பரைத் தேங்காய் விவசாயிகள் நலன்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தேங்காய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் தென்னை விவசாயிகளைப் பாதிக்காதவகையில், கொப்பரைத் தேங்காய் ஆதார நிதி ஒதுக்கப்படும். கோவை, தஞ்சை, பொள்ளாச்சி, காங்கேயம் போன்ற இடங்களில் தேங்காய் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொப்பரைத் தேங்காய்கள் கொள்முதல் செய்யப்படும். அவற்றில் இருந்து அரசு அரவை ஆலைகள் மூலம் எண்ணெய் எடுக்கப்பட்டு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படும். பச்சைத் தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) அறிமுகப்படுத்தவும், அதே நேரத்தில் கொப்பரைத் தேங்காய் (டிரை மற்றும் பால் கொப்பரை ஆகிய இரு வகைகளுக்கும்) விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு லாபகரமான வருவாயை உறுதி செய்யவும், அதன் ஆதார விலையை உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலுவாக வலியுறுத்தப்படும். மேலும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நீரா, தேங்காய் எண்ணெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்க 'தமிழ்நாடு தேங்காய் பதப்படுத்தும் கழகம்' (Tamil Nadu Coconut Processing Corporation) உருவாக்கப்படும்.

Manifesto Summary (English)

A copra price stabilization fund will be allocated to protect coconut farmers from price fluctuations. Copra will be procured through cooperative societies and processed into oil for PDS. MSP will be introduced for green coconuts, and the government will advocate with the central government for higher MSP for copra. A 'Tamil Nadu Coconut Processing Corporation' will be established to create value-added products.