Porul

Reducing Post-Harvest Losses and Ensuring Fair Procurement

கொள்முதல் நிலையங்களில் வீணாவதைக் குறைத்தல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

நெல் மற்றும் கொள்முதல் செய்யப்படும் பிற விளைபொருட்கள் காய்கறிகள், உணவு தானியங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் உட்பட அனைத்து கொள்முதல் நிலையங்கள், தொகுப்பு மையங்கள் (Cluster hubs) மற்றும் சேமிப்புக் கொள்கலன்களில் (Silos) முறையாகக் கையாளப்பட்டு பாதுகாக்கப்படும். இதன் மூலம் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் குறைக்கப்படும். துல்லியமான எடை போடுதல் மற்றும் சேமிப்புத் தரவுகள் முறையாகப் பராமரிக்கப்படும். அதேபோல கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்கோ, மூட்டை ஏற்றி, இறக்கவோ ஒருபைசா கமிஷன் வாங்காமல் பார்த்துக்கொள்ளப்படும். அப்படி கமிஷன் வாங்குவது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Manifesto Summary (English)

All procurement centers, cluster hubs, and silos will ensure proper handling and protection of paddy, other produce, vegetables, food grains, and spices to reduce post-harvest losses. Accurate weighing and storage data will be maintained. Strict action will be taken against anyone taking commission for procurement, loading, or unloading.