Aram

Reclassify Education to State List

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

கல்வி (மருத்துவக் கல்வி உட்பட) ஒன்றிய அரசின் பொதுப்பட்டியலில் இருப்பதால், புதிய கல்விக் கொள்கைத் திணிப்பு, நீட் தேர்வு சீர்திருத்தம் போன்ற கல்வித் தடைகள் ஏற்படுகின்றன. எனவே, ஒன்றிய அரசின் பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை (மருத்துவக் கல்வி உட்பட) மாநிலப் பட்டியலுக்கு மாற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில், ஒருமித்த கருத்துகள் கட்சிகளோடு இணைந்து நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உச்ச நீதிமன்றத்திலும் இதுகுறித்து சீராய்வு மனுத்தாக்கல் செய்து சட்டப்போராட்டம் முன்னெடுக்கப்படும்.

Manifesto Summary (English)

To prevent the imposition of policies like NEET and new education policies, efforts will be made to move education (including medical education) from the Concurrent List to the State List through a constitutional amendment in Parliament with consensus, and by filing a review petition in the Supreme Court.