Launch Tamil Nadu Olympic Victory Scheme with Training and Financial Incentives
தமிழ்நாடு வெற்றி ஒலிம்பிக் திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதற்காக தமிழ்நாடு ஒலிம்பிக் திறன் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம், தமிழகம் முழுவதும் உள்ள திறன் வாய்ந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் அளவுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சிகள் வழங்கப்படும். தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறும் தனிநபர் விளையாட்டு வீரர்களுக்கு 25 லட்சம் ரூபாயும், குழு விளையாட்டு வீரர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்படும். அவர்களில், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு 6 கோடி ரூபாய், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 4 கோடி ரூபாய், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். அதுபோல், தேசிய-சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் 500 வீரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Launch the 'Tamil Nadu Olympic Talent Development Scheme' to make Tamil Nadu the sports capital of India. The scheme will identify talented athletes, provide international-standard training for Olympic success, and offer financial assistance: ₹25 lakhs for individual Olympic qualifiers, ₹10 lakhs for team qualifiers. Olympic medalists will receive cash prizes: ₹6 crore for Gold, ₹4 crore for Silver, and ₹3 crore for Bronze. Additionally, 500 athletes excelling in national and international competitions will receive financial aid.