Inbam

Establish Tamil Nadu Strategic Investment Authority (TNSIA) for Wealth Creation

தமிழ்நாடு வியூக முதலீட்டு ஆணையம் (TNSIA) நிறுவி செல்வத்தை உருவாக்குவோம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

வரி மற்றும் மானியங்களை மட்டுமே நம்பியிருக்கும் முறையிலிருந்து விலகி, செல்வத்தை உருவாக்கும் ஒரு புதிய பொருளாதார மாதிரியை நோக்கத் தமிழகத்தை தமிழக வெற்றிக் கழக அரசு கொண்டு செல்லும். இதற்கு முந்தைய அரசுகள் வரி விதிப்பு மற்றும் சலுகைகளை மட்டுமே நம்பியிருந்த நிலையில், த.வெ.க அரசு ரூ.50,000 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்ட முதலீட்டு ஆணையத்தை (Strategic Investment Authority) நிறுவும். இதன் மூலம் செமிகண்டக்டர்கள் (Semiconductors), மின்சார வாகனங்கள் (EVs), விண்வெளித் துறை (Aerospace), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற அதிவேக வளர்ச்சி கொண்ட துறைகளில் அரசு நேரடியாகப் பங்குதாரராக முதலீடு செய்யும். முதலீடுகளை வெறும் ஒருங்கிணைப்பு செய்வதோடு நின்றுவிடாமல், தமிழக அரசு த.வெ.க. ஆட்சியில் தொழில்நுட்பத்துடன் இணைந்து முதலீடு செய்து, புதிய மதிப்புகளை உருவாக்கி, அதன் உரிமையைப் பகிர்ந்து கொள்ளும். இது லட்சக்கணக்கான உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், மாநிலத்திற்கு வழி அல்லாத புதிய வருவாய் ஆதாரங்களையும் ஈட்டித் தரும்.

Manifesto Summary (English)

The TVK government will establish a Tamil Nadu Strategic Investment Authority (TNSIA) with a ₹50,000 crore capital outlay to shift the state from a tax and subsidy-dependent model to a wealth-creating economic model. TNSIA will directly invest as a stakeholder in high-growth sectors like semiconductors, EVs, aerospace, AI, and advanced manufacturing, leveraging technology to create new value and share ownership. This initiative aims to generate lakhs of high-quality jobs and new, non-tax revenue sources for the state.